பப்பாளி சாகுபடிக்கு உகந்த உழவு முறைகள்:
பப்பாளி சாகுபடிக்கான மண் தயாரிப்பு:
பப்பாளி சாகுபடியில் உயர் மகசூலை உறுதிப்படுத்த மண் தயாரிப்பு மிகவும் முக்கியமான முன்னிலை ஆகும். இதற்காக மூன்று முக்கியமான உழவு முறைகளை பின்பற்றுவது அவசியம்.
முதல் உழவு:
ஐந்து கலப்பை அல்லது சட்டி கலப்பையைப் பயன்படுத்தி நெடுக்கு திசையில் உழவு செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சூரிய ஒளி மண்ணை நேரடியாகத் தொட்டு மண்ணின் வளத்தை அதிகரிக்கச் செய்யும். மேலும், களைகளை கட்டுப்படுத்தவும் உதவும்.
இரண்டாம் உழவு:
கொத்துக் கலப்பையைப் (9 கலப்பை) பயன்படுத்தி குறுக்கு திசையில் உழவு செய்ய வேண்டும். இது மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரித்து, காற்றோட்டத்தை மேம்படுத்த உதவும்.
மூன்றாம் உழவு:
சூழல் கலப்பை / ரோட்டாவேட்டரைப் பயன்படுத்தி மண்ணை நன்கு பொடித்து, சமப்படுத்த வேண்டும். இந்த உழவின் போது, மட்கிய தொழு உரத்தை இட்டு மண்ணுடன் நன்கு கலக்க வேண்டும். இது மண்ணின் வளத்தை அதிகரித்து, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்கும். இதன் மூலம் பயிர் நடவு செய்யத் தகுந்த நிலையை உருவாக்கலாம்.
குறிப்பு:
முதல் உழுவு, இரண்டாம் உழவு மற்றும் மூன்றாம் உழவு ஒவ்வொன்றும் 10 நாட்கள் இடைவெளியில் உழவு செய்ய வேண்டும்.