பப்பாளி செடி நடவிற்று பின் முதல் 20 நாட்கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு முறைகள்
"Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப் பண்ணை"யிலிருந்து நாற்றுகளைப் பெற்றுக்கொண்ட பிறகு, 3 முதல் 7 நாட்கள் வரை நிழலான பகுதியில் அல்லது மிதமான சூரிய ஒளி உள்ள இடத்தில் வைத்து, தினமும் தண்ணீர் பாய்ச்சவும். பின்னர், கீழ்க்காணும் வழிமுறைப்படி பூஞ்சாண கொல்லி / பூஞ்சைக் கொல்லி மருந்துகளைத் தெளிக்கவும்."
Day 1: BLUE COPPER FUNGICIDE (1 Litre water - 3 gms)
Day 3: RIDOMIL GOLD FUNGICIDE (1 Litre water - 3 gms) + Bayer's Ambition (1 Litre water – 2 ml)
Day 6: RIDOMIL GOLD FUNGICIDE (1 Litre water - 3 gms)
பப்பாளி நாற்றை நடவு செய்த பின் அடுத்து 20 நாட்களுக்கு கீழ்கண்டவாறு பூஞ்சாண கொல்லி மருந்துகளை வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
Day 1: BLUE COPPER FUNGICIDE (1 Litre water - 3 gms) - 1 Plant - 75 ml Mixed Solutions
Day 5: RIDOMIL GOLD FUNGICIDE (1 Litre water - 3 gms) + Isabion Syngenta (1 Litre water – 2 ml) - 1 Plant - 75 ml Mixed Solutions
Day 10: SAAF Fungicide (1 Litre water - 3 gms) + Bayer's Ambition (1 Litre water – 3 ml) - 1 Plant - 75 ml Mixed Solutions
Day 15: RIDOMIL GOLD FUNGICIDE (1 Litre water - 4 gms) - 1 Plant - 75 ml Mixed Solution
Day 20: Aliette Fungicide (1 Litre water - 3 gms) + Bayer's Ambition (1 Litre water – 4 ml) - 1 Plant - 75 ml Mixed Solutions
உர மேலாண்மையும் பூச்சி மேலாண்மையும் சிறப்பாக கடைபிடித்து, பப்பாளி விவசாயத்தில் நல்ல மகசூல் மற்றும் சிறப்பான லாபத்தை பெற்று பயன்பெறுவதற்று Dr.விவசாயம் பப்பாளி நாற்றுப்பண்ணை வாழ்த்துகிறது.
முக்கியமான குறிப்பு:
இது ஒரு பொதுவான வழிகாட்டியாகும். மண் வகை, காலநிலை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து சூழ்நிலைகளுக்கு ஏற்ப சரிசெய்தல்கள் தேவைப்படலாம்.
இடுபொருள்களின் விகிதங்கள் (உரங்கள், ஊட்டச்சத்துக்கள்) உங்கள் மண்ணின் வளத்தன்மை மற்றும் நீரின் தரத்திற்கு ஏற்ப சரிசெய்யப்பட வேண்டும்.