இயற்கை முறையில் பப்பாளி சாகுபடிக்கான இயற்கை இடுபொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் மாதக்கால அட்டவணை (அளவு / ஏக்கர்)
பப்பாளி சாகுபடிக்கான இயற்கை இடுபொருட்கள் மற்றும் ஊட்டச்சத்துகள்
பப்பாளி விவசாயம் தமிழக விவசாயிகளுக்கு ஒரு நல்ல வருமானம் ஈட்டக்கூடிய ஒரு லாபகரமான தொழிலாகும்.
தமிழகத்தில் பப்பாளி சாகுபடி ஒரு முக்கியமான விவசாயமாகும். இதன் சுவையான பழம் மற்றும் மருத்துவ குணங்கள் காரணமாக, பப்பாளிக்கு எப்போதும் நல்ல சந்தை தேவை இருக்கும். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது.
1. நடவுக்குப்பின் 3 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
உயிர் தண்ணீர் + சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 2 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
2. நடவுக்குப்பின் 5 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
டிரைக்கோடெர்மா விரிடி 2 லிட்டர் + மெட்டாரைசியம் அனிசோபிளியே 2 லிட்டர் ( அ ) டிரைக்கோடெர்மா விரிடி 2 லிட்டர் + பேசிலோமைசிஸ் லிலாசினஸ் 2 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
3. நடவுக்குப்பின் 10 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
பஞ்ச காவியம் கரைசல் 2 லிட்டர் + சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 2 லிட்டர் (அல்லது) ஜீவாமிர்தக்கரைசல் 200 லிட்டர் + சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 2 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
4. நடவுக்குப்பின் 15 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
அக்னி அஸ்திரம் கரைசல் 500 மி.லி. / 10 லிட்டர் தண்ணீர் + ஐந்திலை கரைசல் 500 மிலி / 10 லிட்டர் தண்ணீரில் (அல்லது) வெர்டிசிலியம் லெக்கானி 100 மி.லி. / 10 லிட்டர் தண்ணீர் + மெட்டாரைசியம் அனிசோபிளியே + ஒட்டுப்பசை 100 மி.லி. அரிசி கஞ்சி (அ) மைதா மாவு கஞ்சி கலந்து தெளிக்க வேண்டும்.
5. நடவுக்குப்பின் 20 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
மீன் அமிலம் 2 லிட்டர் + பாஸ்போ பாக்டீரியா 2 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
6. நடவுக்குப்பின் 25 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
வெர்டிசிலியம் லெக்கானி 100 மி.லி. + பெவேரியா பேசியானா 100 மி.லி. / 10 லிட்டர் தண்ணீர் + ஒட்டுப்பசை 100 மி.லி. அரிசி கஞ்சி (அ) மைதா மாவு கஞ்சி கலந்து தெளிக்க வேண்டும்.
7. நடவுக்குப்பின் 30 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
யூமிக் அமிலம் 5 லிட்டர் + ஜீவாமிர்தக்கரைசல் 200 லிட்டர் (அ) பேசிலோமைசிஸ் லிலாசினஸ் 2 லிட்டர் + ஜீவாமிர்தக்கரைசல் 200 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
8. நடவுக்குப்பின் 35 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 10 மி.லி. + பேசிலஸ் சப்டிலிஸ் 10 மி.லி. + மோர் 10 மி.லி. + இளநீர் 10 மி.லி. & 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
9. நடவுக்குப்பின் 40 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
மீன் அமிலம் 3 லிட்டர் + பாஸ்போ பாக்டீரியா 2 லிட்டர் + பொட்டாஷ் பாக்டீரியா 2 லிட்டர் (அ)
ஜீவாமிர்தக்கரைசல் 200 லிட்டர் + பாஸ்போ பாக்டீரியா 2 லிட்டர் + பொட்டாஷ் பாக்டீரியா 2 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
10. நடவுக்குப்பின் 45 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
மீன் அமிலம் 200 மி.லி. + போரான் 50 கிராம் / 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
11. நடவுக்குப்பின் 50 ஆம் நாள்: ( இலை வழி தெளிப்பு )
வசம்பு கரைசல் 500 மிலி (அ) Perfect 2 மி.லி. + மோர் 200 மி.லி. / 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
12. நடவுக்குப்பின் 55 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
வெர்டிசிலியம் லெக்கானி 10 மி.லி. + மெட்டாரைசியம் அனிசோபிளியே 10 மி.லி. (அ) வெர்டிசிலியம் லெக்கானி 10 மி.லி. + பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் 10 மி.லி. + ஒட்டுப்பசை 100 மி.லி. அரிசி கஞ்சி (அ) மைதா மாவு கஞ்சி கலந்து தெளிக்க வேண்டும்.
13. நடவுக்குப்பின் 60 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
கடல் பாசி 5 லிட்டர் + ஜீவாமிர்தக்கரைசல் 200 லிட்டர் + பேசிலஸ் சப்டிலிஸ் 2லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
14. நடவுக்குப்பின் 65 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
தேமோர் கரைசல் 500 மி.லி. + சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 100 மி.லி. (அ) அரைப்பு மோர் கரைசல் 500 மி.லி. / 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.
15. நடவுக்குப்பின் 70 ஆம் நாள்: ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
மீன் அமிலம் 3 லிட்டர் + பாஸ்போ பாக்டீரியா 2 லிட்டர் + பொட்டாஷ் பாக்டீரியா 2 லிட்டர் & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
16. நடவுக்குப்பின் 75 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
வெர்டிசிலியம் லெக்கானி 75 மி.லி. + மெட்டாரைசியம் அனிசோபிளியே 75 மி.லி. + பேசிலஸ் துரிஞ்சியென்சிஸ் 75 மி.லி. + ஒட்டுப்பசை 100 மி.லி.அரிசி கஞ்சி (அ) மைதா மாவு கஞ்சி கலந்து தெளிக்க வேண்டும்.
17. நடவுக்குப்பின் 80 ஆம் நாள் : ( தரை வழி & சொட்டு நீர் வழியாக )
ஜீவாமிர்தக்கரைசல் 200 லிட்டர் + மீன் அமிலம் 3 லிட்டர் + போரான் 1 கிலோ & 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கொடுக்க வேண்டும்.
18. நடவுக்குப்பின் 85 ஆம் நாள் : ( இலை வழி தெளிப்பு )
சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் 100 மி.லி. + பேசிலஸ் சப்டிலிஸ் 100 மி.லி. + மோர் 200 மி.லி. + இளநீர் 200 மி.லி. / 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
19. நடவுக்குப்பின் 90 ஆம் நாள் : ( தரை வழியாக )
மண்புழு உரம் 2 கிலோ / மரம் (அ) M.N.Mixer 50 கிராம் / மரம்.
Prepared by
Dr.Vivasayam Crop Care Services, Teams
திரு P. தனசேகரன், சுப்பரமணியசிவா கூட்டுப் பண்ணயைம், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் லிட், பூமாலை வணிக வளாகம், புதிய பஸ் நிலையம் அருகில், தருமபுரி. ☎9443465116
குறிப்பு:
இது ஒரு பொதுவான வழிகாட்டி. உங்கள் நிலத்தின் தன்மை, பருவநிலை மற்றும் பிற காரணிகளைப் பொறுத்து மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை இடுபொருள்களின் விகித அளவுகள் மண் வளத்திற்கு ஏற்ப மற்றும் நீரின் தன்மையை பொறுத்து மாறுபடலாம்.